Homeஅரசியல்பாஸ் கட்சிக்கு வெ.90 லட்சம் வழங்கப்பட்டதா? ஆடம்பர கார்கள் சொத்துக்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல்

பாஸ் கட்சிக்கு வெ.90 லட்சம் வழங்கப்பட்டதா? ஆடம்பர கார்கள் சொத்துக்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல்

கோலாலம்பூர் பிப் 28-

1எம்டிபி நிதியிலிருந்து பாஸ் கட்சிக்கு 90 லட்சம் வெள்ளி  வழங்கப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வரும் எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆடம்பர கார்கள் சொத்துக்கள் மற்றும் ரொக்க தொகையையும் பாஸ் கட்சியிடமிருந்து பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொயோட்டா வெல் பையர், ரேஞ்ஜ் ரோவர், மினி குப்பர் ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எம்ஏசிசிக்கு நெருக்கமான தகவல்கள் கூறின.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பாஸ் கட்சியின்  தலைமைச் செயலாளர்  டத்தோ தக்யுடின்  ஹாசன்  நேற்று எம்ஏசிசி  தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

மேலும் 20 லட்சம் வெள்ளி மதிப்புடைய கடை வீடு ஒன்று மற்றும் வங்கிக் கணக்கிலிருந்து 23 லட்சம் வெளியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து இருப்பதாகவும் கூறப்பட்டது.

நாளை முதல் மேலும் அதிகமான பாஸ் தலைவர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு  விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

spot_img

latest articles

explore more