Homeஅரசியல்சபாவின் எட்டு மக்கள் பிரதிநிதிகள் பெர்சத்து கட்சியில் இணைந்தனர்

சபாவின் எட்டு மக்கள் பிரதிநிதிகள் பெர்சத்து கட்சியில் இணைந்தனர்

கோலாலம்பூர், மார்ச் 16-

சபாவை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரண்டு மேலவை உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான பெர்சத்து  கட்சியில் இணைந்தனர்.

இதன்வழி பெர்சத்து  கட்சி நாடாளுமன்றத்தில் 26 நாடாளுமன்ற உறுப்பினர்களை இப்போது கொண்டுள்ளது. அதோடு நாடாளுமன்றத்திலும் பக்காத்தான் ஹரப்பான் எனப்படும் நம்பிக்கை கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இப்போது 129 ஆக உயர்ந்துள்ளது.

வாரிசான் மற்றும் யுப்கோ கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நம்பிக்கை கூட்டணி தலைமையிலான ஆளும் கட்சி இப்போது 139 நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளது. இது மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 63 விழுக்காடாகும்

மேலும் சபாவின் இரு சட்டமன்ற உறுப்பினரான அர்ஜுன் ஊர் மற்றும் மசூதி மஞ்சூர் ஆகிய இருவரும் வருஷத்து கட்சியில் இணைந்தனர் கடந்த ஜனவரி மாதம் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சென்று அப்துல் கனி மற்றும் ஆனந்தராஜ் ஆகியோரும் நேற்று அதிகாரப்பூர்வமாக தனது கட்சியில் இணைந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட செனட்டர் அப்துல்கனி முகமட் யாசின், ஜான் அன்பு ரோஸ் ஆகியோரும் பெர்சத்து கட்சியின் உறுப்பினர்களாக இணைந்தனர்.

இவர்கள் அனைவரும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களிடம்  தங்களது உறுப்பினர் பாரங்களை சமர்ப்பித்தனர்.

spot_img

latest articles

explore more