பெட்டாலிங் ஜெயா, ஏப். 10
சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறை தலைமையகம் கோவிட்-19 சாலைத் தடுப்புப் பணிக்கு கலகத் தடுப்புப் படையினரின் (FRU) உதவியைப் பெற்றிள்ளது.
கலகத் தடுப்புப் படையினரின் நான்கு அதிகாரிகளும் 80 உறுப்பினர்களும் இன்று முதல் அம்மாவட்டத்தில் பணியில் ஈடுபடுவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி நிக் எசானி முகம்மட் ஃபைசால் தெரிவித்தார்.
அம்மாவட்டத்தில் புதிதாகப் போடப்பட்ட இரு சாலைத் தடுப்புகளுடன் சேர்த்து மொத்தம் 9 சாலைத் தடுப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
அத்துடன் அம்மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் செயல்முறை அதிகாரிகள் கால்நடையாகச் சென்று காவல் சுற்றுப் பணிகளில் ஈடுபடுவது குறித்தும் தாங்கள் திட்டமிட்டு வருவதாக அவர் கூறினார்.


