புத்ராஜெயா, செப் 11-
மலேசியாவில் இன்று கொவிட் 19 கிருமித் தொற்று காரணமாக 182 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கிருமித் தொற்றுக்கு ஆளானவர்களில் 181 சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்தது என்றும் 1 சம்பவம் வெளிநாட்டைச் சார்ந்தது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை.

இதனிடையே இன்று 14 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த காரணமாக இதுவரையில் இந்த கிருமித் தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,810 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 501 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் 9 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் செயற்கை சுவாசக் கருவியின் உதவியை நாடியுள்ளார். இது 5.11 % ஆகும்
இந்த கிருமித் தொற்றின் காரணமாக மரணச் சம்பவம் நிகழவில்லை. இதனால் மரண எண்ணிக்கை 128ஆக நீடிக்கின்றது. 1.30 விழுக்காடு ஆகும்.
இன்று 14 பேர் குணமடைந்துள்ளார்கள். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,181 ஆக அதிகரித்துள்ளது. இது 93.59% ஆகும்


