Homeஆன்மீகம்மீட்சிப்பெறும் & நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை: ஆலயங்களைத் திறக்க அனுமதி & திருமணம் நடத்தலாம்...

மீட்சிப்பெறும் & நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை: ஆலயங்களைத் திறக்க அனுமதி & திருமணம் நடத்தலாம் – மலேசிய இந்து சங்கம்

கோலாலம்பூர், நவம்பர் 9:-

தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, நாட்டில் மீட்சிப்பெறும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையையும் (PKPP) பல இடங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையையும் (PKPB) அரசாங்கம் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், 09.11.2020 முதல் 06.12.2020 வரை ஆலயங்களைத் திறப்பதற்கும் திருமணங்களை நடத்துவதற்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என மலேசிய இந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. எனவே ஆலயங்களில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாட்டுத் தர விதிமுறைகளை (எஸ்.ஓ.பி) மலேசிய இந்து சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

மீட்சிப்பெறும் (PKPP) -நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (PKPB) பகுதியில் உள்ள ஆலயங்களில் கடைப்பிடிக்க வேண்டிய எஸ்.ஓ.பி:

  1. ஆலயங்களைத் திறக்க அனுமதி

ஆலய நித்திய பூசையில் கலந்து கொள்ள ஒரே நேரத்தில் அதிகப்படியாக 30 பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. (இந்த எண்ணிக்கை ஆலயக் கொள்ளளவையும் கூடல் இடைவெளியையும் பொறுத்து குறையலாம்). முதற்கட்ட பக்தர்கள் வெளியேறியப்பின் ஆலயம் சுத்தம் செய்யப்பட்டு அடுத்து வரும் பக்தர்களை (அதிகபட்சம் 30 பேர்) ஆலயத்தினுள் அனுமதிக்கலாம். ஆலயங்கள் தங்களின் வழக்கமான நித்திய பூசை (காலை & மாலை) நேரத்தில் ஆலயத்தைத் திறக்கலாம்.

  1. விழாக்களுக்கு அனுமதி இல்லை

ஆலயத்தில் பெரிய அளவிலான விழாக்களை நடந்த அனுமதி இல்லை. கந்த சஷ்டி விரதம், கார்த்திகை தீபம் போன்ற சிறப்பு நாட்களும் மிதமான அளவில் கொண்டாடப்பட வேண்டும்.

  1. அடிப்படை எஸ்.ஓ.பி

அனைத்து பக்தர்களும் ஆலயத்தில் இருக்கும்போது முழு நேரமும் முகக் கவரி அணிந்திருக்க வேண்டும். ஆலய நிர்வாகம், மைசெஜாத்ரா (mySEJAHTERA) செயலி அல்லது வருகையாளர் பதிவு புத்தகம் ஏற்பாடு செய்து பெயர், கைப்பேசி எண், உடல் வெப்பம் ஆகியவற்றைP பதிவிட வேண்டும். கைதூய்மி அல்லது கிருமி நாசினியை ஏற்பாடு செய்தல் கட்டாயம். பக்தர்கள் 1 மீட்டர் தூர கூடல் இடைவெளியைப் பின்பற்றுவதை ஆலய நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். பக்தர்களுக்குப் பிரசாதம் அல்லது உணவைப் பொட்டலமாக வழங்க வேண்டும்.

கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு (PKPD) பகுதியில் உள்ள ஆலயங்களில் கடைப்பிடிக்க வேண்டிய எஸ்.ஓ.பி:

  1. பக்தர்களுக்கு அனுமதி இல்லை

1.1 பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அரசாங்கத்தின் அறிவிப்பு வரும் வரை ஆலயம் பொதுமக்களின் வழிப்பாட்டுக்கு மூடப்பட்டிருக்கும்.

  1. நித்திய பூசை

ஆலயத்தில் நித்திய பூசை (காலை & மாலை) மட்டுமே நடைப்பெற அனுமதி உண்டு. இதனை ஆலயக் குருக்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பு: இது மத்திய அரசின் எஸ்.ஓ.பி ஆகும். மாநில வாரியாக பக்தர்களின் எண்ணிக்கை நிர்ணயம் மாறலாம் என்பதால், ஆலயங்கள் தங்கள் மாநில அரசாங்கம் அறிவித்துள்ள எஸ்.ஓ.பிகளையும் கவனித்து பின்பற்ற வேண்டும்.

மேலும், தற்போது வட்டாரத்தையும் மாநிலத்தையும் கடந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் தங்கள் வட்டாரத்தில் உள்ள ஆலயங்களுக்கு மட்டுமே செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு (PKPB) பகுதியில் திருமணத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது

  1. ஆலயத்தில் திருமணத்தை நடத்த அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அதிகப்பட்சம் 30 பேர் திருமணத்தில் கலந்து கொள்ளலாம். மற்ற அனைத்து அடிப்படை எஸ்.ஓ.பி-க்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மீண்டும் தலைத்தூக்கி இருக்கும் கோவிட்-19 நச்சில் பெருந்தொற்று பரவலை அனைவரும் இணைந்து கட்டுப்படுத்துவோம்.
நாட்டில் உள்ள இந்துக்களுக்கும் இந்து ஆலயங்களுக்கும் சேவை செய்வதில் பெருமைக் கொள்வதோடு, இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் ஆலயங்களுக்கு சிறந்தவற்றை வழங்க உறுதிக் கொள்கிறது என மலேசிய இந்து சங்கம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

spot_img

latest articles

explore more