spot_img
13.3 C
London
spot_img
Home மலேசியா கல்வி ஜோகூர், பாகோ, பான் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் இயங்கலையில் இல்லிருப்பு அறிவியல் விழா

ஜோகூர், பாகோ, பான் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் இயங்கலையில் இல்லிருப்பு அறிவியல் விழா

0
278

பாகோ (ஜோகூர்), நவம்பர் 28:-

கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் வேளையில் பாகோ பாங் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் இயங்கலை இல்லிருப்பு அறிவியல் விழா அண்மையில் நடந்து முடிந்தது.

பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் வீட்டிலிருந்தபடியே இந்த அறிவியல் விழா சிறப்பாக நடந்து முடிந்தது. தடைப்பட்டிருக்கும் வகுப்பறைக் கல்வி, புறப்பாட நடவடிக்கைகள், கலையிழந்த பள்ளி வளாகங்கள் – இவற்றுக்கு நடுவே இயங்கலையில் இந்த அறிவியல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பெற்றோர்களிட்த்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதலாம் படிநிலை மாணவர்களுககு அறிவியல் திரட்டேடு தயாரிக்கும் போட்டியும், இரண்டாம் படிநிலை மாணவர்களுக்கு அறிவியல் பரிசோதனைப் போட்டியும் நடத்தப்பட்டது. பெற்றோர்களின் ஆதரவுடனும் ஆசிரியர்களின் வழிகாட்டலுடனும் இந்த அறிவியல் விழா நடைபெற்றதாக அப்பள்ளியின் ஆசிரியர் வினோதினி தெரிவித்தார்.

மாணவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்த விழாவை இயங்கலையில் நடத்த முடிவெடுத்தோம். பெற்றோர்களின் ஆதரவும் ஆசிரியர்களின் கடின உழைப்பும் இவ்விழாவை வெற்றி பெறச் செய்தது.”

– தலைமையாசிரியர் செல்வம்

தேசிய நிலை வரையில் நடைபெற்று வந்த அரிவியல் விழா இவ்வாண்டு கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நடைபெறவில்லை. இருப்பினும், மாணவர்கள் கல்வியில் உற்சாகம் இழந்து விடக்கூடாது என்பதற்காக இது போன்ற நிகழ்ச்சியை புதிய நடைமுறைக்கு ஏற்ப இயன்ங்கலையில் நடத்தினோம் என அப்பள்ளியின் தலைமையாசிரியர் தெரிவித்தார்.