கோலாலம்பூர் | ஜூன் 7:-
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒப்பிடுகையில், கோவிட்-19 தொற்றுப் பரவல் குறியீடு முதன் முறையாக 1.0க்கும் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தக் குறியீடு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் இறங்கு முகத்தைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட்ட தகவல் அறிக்கையில், தொற்றுப் பரவல் குறியீடு 0.99 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடைசியாக தொற்றுப் பரவல் குறியீடு கடந்த ஏப்ரல் 7 ஆம் நாள் 1.0 ஆகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவ்வெண்ணிக்கை கடந்த மே 23 ஆம் நாள் 1.21 ஆகப் பதிவு செய்யப்பட்டது. இருந்தும் மே 30 ஆம் நாள் அவ்வெண்ணிக்கை குறைந்தது.
தொற்றுப் பரவல் குறியீடு 1.0 ஆகப் பதிவு செய்யப்படிருந்தால் புதிய நேர்வுகள் தொடர்ந்து அதிகமாக இருக்கும். தொற்றுப் பரவல் குறியீடு 1.0க்கும் குறைவாக இருந்தால் புதிய நேர்வுகள் குறைவாகப் பதிவு செய்யப்படலாம்.
கடந்த வாரங்களில் அன்றாட நேர்வுகள் 6.000 முதல் 8.000 வரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து அன்றாட நேர்வுகள் குறைவாகப் பதிவு செய்யப்பட தொற்றுப் பரவல் குறியீடு 1.0க்கும் குறைவாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
கடந்த ஜூன் 1 முதல் கோவிட்-19 பரவலைத் தடுக்க நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டது.

கடந்த வாரங்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 44 அதிகரித்து 890 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு முந்தைய வாரங்களில் அவ்வெண்ணிக்கை 165 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணீக்கையை ஒப்பிடும்போது இறாஅப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடந்த மூன்று வாரங்களில் 100க்கும் மேற்பட்ட அன்றாட இறப்புகள் நாடு இது வரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவ்வெண்ணிக்கை கடந்த ஜூன் 2 ஆம் நாள் 126 ஆக – மிக அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


