spot_img
17.3 C
London
spot_img
Home மலேசியா கல்வி தொழிற்கல்விப் பயிற்சிக் கடன் PTPK திரும்பச் செலுத்துவது ஒத்திவைக்கப்படுகிறது ! மனிதவள அமைச்சு

தொழிற்கல்விப் பயிற்சிக் கடன் PTPK திரும்பச் செலுத்துவது ஒத்திவைக்கப்படுகிறது ! மனிதவள அமைச்சு

0
282

கோலாலம்பூர் | 2/7/2021:-

தொழிற்கல்விப் பயிற்சிக் கடன் எனப்படும் PTPK கடனைத் திரும்பச் செலுத்துவதில் தளர்வு வழங்கப்படுகிறது. தகுதி பெறும் மாணவர்கள் அதனை மூன்று மாதங்களுக்குத் திரும்பச் செலுத்துவதிலிருந்து ஒத்துவைக்கும் சலுகை வழங்கப்படும் என மனிதவள அமைச்சு கூறியுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுத் தாக்கத்தால் கடனைத் திரும்பச் செலுத்த முடியாதவர்களுக்கு இந்தச் சலுகை பேருதவியாக இருக்கும் என அது குறிப்பிட்டது.

இவ்விவகாரம் குறித்து பேசிய அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ மு. சரவணன், ஏறத்தாழ ரி.ம. 35.3 மில்லியன் மதிப்புமிக்க நிதியை 89.730 மாணவர்கள் திரும்பச் செலுத்துவதிலிருந்து தளர்வு வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் இதே போல் தளர்வு மூன்று முறை வழங்கி இருப்பதாகவும் 179,000 மாணவர்கள் ரி.ம. 220 மில்லியன் தொகையைத் திரும்பச் செலுத்துவது ஒத்தி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கோவிட்-19 காலத்தில் பல நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை. அதில் பணி புரியும் பல பிடிபிகே கடன் பெற்றாவர்கள் வருமானம் பாதிப்பக்கப்பட்டுள்ளார்கள். வேலை நிறுத்தம், ஊதியத்தில் பிடித்தம், ஊதியமில்லா விடுப்பு, அரை ஊதியம் போன்ற சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

பிடிபிகே கடன் பெற்றவர்களின் நலனைக் காக்கும் வகையில் வழங்கப்படும் சமூக அக்கரை கொண்ட ஓர் உதவியாக இந்தத் தளர்வு அமையும் என அமைச்சு நம்ப்புவதாக டத்தோ ஶ்ரீ சரவணன் தெரிவித்தார்.

வருமானம் பாதிக்கப்பட்ட பிடிபிகே கடன் பெற்றவர்கள் 1/7/2021 முதல் 30/9/2021 வரை பிடிபிகே இணையத்தளா முகவரியில் கிடைக்கப்பெறும் விண்ணப்ப பாரத்தை நிறைவு செய்து அனுப்பலாம்.