Homeமலேசியாஜோகூரில் கோவிட்-19 பரிசோதனைகளையும் தடுப்பூசி போடப்படுவதையும் விரிவுப்படுத்த வேண்டும் ! - இளவரசர்

ஜோகூரில் கோவிட்-19 பரிசோதனைகளையும் தடுப்பூசி போடப்படுவதையும் விரிவுப்படுத்த வேண்டும் ! – இளவரசர்

ஜோகூர் பாரு | 5/7/2021 :-

தறபொழுது மோசமடைந்திருக்கும் கோவிட்-19 தாக்கத்தைக் கையாளும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த ஜோகூர் மாநில அரசாங்கத்தை அம்மாநில இளவரசர் துவான்கு மாக்கோத்தா ஜோகூர் துவான்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் அறிவுறுத்தியுள்ளார்.

தமது முகநூல் வாயிலாக கருத்துரைத்த இளவரசர் திஎம்ஜே, இது வரையில் அம்மாநில கோவிட்-19 நேர்வுகள் அதிகமான அளவில் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார்.

முன்களப் பணியாளர்களைத் தவிர்த்து இதர முக்கியமானத் துறையினர் உட்பட ஜோகூர் மாநில மக்களிடையே கோவிட்-19 சுய பரிசோதனை கருவிகள் பயன்பாட்டை அதிகரிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

மருந்து, உணவு, அடிப்படைத் தேவைக்கானப் பொருட்கள் உற்பத்தித் துறைகலுக்கு அவை வழங்கப்பட வேண்டும்.
பொது மக்களும் மிக விரைவில் பரிசோதிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

முன்னதாக, இளவரசர் திஎம்ஜே-வை ஜோகூர் மாநில முதல்வர் டத்தோ ஹஸ்னி முகம்மது, ஜோகூர் மாநில சுற்றுலா, இளைஞர், விளையாட்டுத் துறை செயற்குழுவின் தலைவர் டத்தோ ஓன் ஹஃபிஸ் கஸாலி, ஜோகூர் மாநில அரசாங்கச் செயலாளர் டத்தோ அஸ்மி ரோஹானி ஆகியோரின் சந்திப்பை ஏற்றுக் கொண்டார்.

spot_img

latest articles

explore more