கோலாலம்பூர் | 10/7/2021 :-
எதிர்வரும் திங்கட்கிழமை வரை வட தீபகற்ப மலேசியாவில் இடியுடன் கூடிய மழையும் அதிவேகமானக் காற்று பல மாக வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்று நள்ளரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், பெர்லிஸ், பினாங்கு, கெடாவின் இலங்காவி, குபாங் பாசு, கோத்தா செத்தார், பொக்கோக் சேனா, யான், பெண்டாங், கோலா மூடா, கூலிம், பண்டார் பாரு அகீய மாவட்டங்களை உட்படுத்திய கெடா மாநிலம், பேராவின் கிரியான், லாருட் மாத்தாங் செலாமா ஆகிய பகுதிகளிலும் இந்த வானிலை மாற்றம் ஏற்படும் என அது கணித்துள்ளது.
இந்த வானிலையால் பள்ளமான நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம் எனவும் அது எச்சரிக்கை விடுத்துள்ளது.
மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தல் காற்று வீசும் எனவும் அதனால் 4.5 மீட்டர் உயரத்திற்கு மலாக்கா நீரிணையின் வடக்குப் பகுதியில் அலைகள் எழும் எனவும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது.
இதனால், கடற்கரையிலும் கடல் ஆறு சந்திக்கும் இடங்களில் கடல் நீர் அளவுக்கு மீறி வழியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


