Homeமலேசியாசுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையின் 42 பணியாளர்களுக்கு கோவிட்-19 தொற்று

சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையின் 42 பணியாளர்களுக்கு கோவிட்-19 தொற்று

சுங்கை பெட்டானி | 10/7/2021 :-

இங்குள்ள சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையின் 42 பணியாளர்களுக்கு கோவிட்-19 தொற்று கண்டிருப்பதாக ஜெடா மாநில சுகாதாரத் திணைக்களத்தின் இயக்குநர் டாக்டர் ஓத்மான் வாரிஜோ தெரிவித்தார்.

 தொற்றுக்கு இலக்கான மருத்துவர்கலும் தாதியர்களும் தங்களின் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, அம்மருத்துவமனையின் 30 ஊழியர்கள் கோவிட்-19 தொற்றூ கண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது மேலும் 12 பேருக்கு முதலாம் – இரண்டாம் நிலை கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கு டெல்தா, பெத்தா வகைத் தொற்று கண்டிருக்கிறதா அல்லது பழைய வகைத் தொற்று பீடித்துள்ளதா என இன்னும் அறியப்படவில்லை என்று அவர் கூறினார்.

கடந்த புதன் கிழமை, அம்மருத்துவமனை ஊழியர்களுக்குத் தொற்று கண்டிருப்பதால் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டு அது மூடப்பட்டதாகத் தகவல் வெளி வந்திருந்ததை சுகாதாரம் – ஊராட்சித்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ டாக்டர் முகம்மட் ஹயாத்தி ஓத்மான் மறுத்திருந்தார்.

spot_img

latest articles

explore more