கிள்ளான் | 11/7/2021
கிள்ளனில் உள்ள தெங்கு அம்புவான் இரகிமா மருத்துவமனை தற்போது வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டது எனவும் அது முழுமையான கோவிட்-19 மருத்துவமனையாகச் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தக்கவலை அம்மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஸுல்கர்னியான் முகம்மட் இரவி தெரிவித்தார்.
வெளி நோயாளிகள் சிகிச்சை மையம், ஃபிசியோதெராபி ஆகிய பிரிவுகள் தற்சமயம் பாதிக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.
குறிப்பிடப்பட்ட அந்தப் பிரிவுகளில் நேர்முகச் சந்திப்பு கொண்ட நோயாளிகளுக்கும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளா வேண்டியவர்களுக்கும் புதிய தேதி வழங்கப்படும். அது குறித்தத் தகவல் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
எனவே, நோயாளிகள் தங்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி குறித்து விழிப்போடு இருக்க வேண்டும் எனவும் அந்தத் தேதியைத் தவற விட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதே வேளையில் மருத்துவமனையின் அப்பிரிவுகள் மூடப்பட்டிருக்கும் காலத்தில் நோயாளிகல் தங்களின் மருந்துகளையும் தவற விடாமல் புதிய தேதியில் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தலைநகரில் கோவிட்-19 அதிமாகப் பதிவு செய்துள்ள மருத்துவமனைகளில் தெங்கு அம்புவான் இரகிமா மருத்துவமனையும் ஒன்று.
இதனிடையே, பணியாளர்கள் பற்றாக்குறையைச் சந்தித்துள்ள இம்மருத்துவமனைக்கு போதுமான ஆள்பலத்தை ஏற்பாடு செய்யப்படும் என சிலாங்கூர் மாநில சுகாதாரத் திணைக்களத்தின் இயக்குநர் டாக்டர் ஷாரி ஙாடிமான் கூறினார்.


