புத்ராஜெயா | 11/7/2021:-
கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள நிர்ணயிக்கப்பட்டுள்ள சீரான நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாத ஆலைகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். தேவை இருப்பின் அவற்றை உடனடியாக மூடவும் அரசு ஆணையிடும் என துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
விதிமுறைகளை மீறும் ஆலைகளின் நடவடிக்கையை அரசு பொறுத்துக்கொள்ளாது என அவர் கூறினார்.
கோவிட்-19க்கு எட்ய்ஹிரானப் போரில் நாம் முழுமையாக இறங்கவுள்ளோம். எனவே, விதிமுறைகளை மீறும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தமது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
நேற்று 108 தொழிற்சாலைகளும் வணிகத்தளங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ள சீரான நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாததால் அவற்றை இரண்டு நாட்களுக்குள் மூடப்பட்ட உத்தரவிடப்பட்டுள்ளதாக நேற்று அமைச்சர் தெரிவித்தார்.
இதே குற்றத்திற்காக கடந்த வியாழக்கிழமை 56 தொழிற்சாலைகளும் வணிகத்தளங்களும் கடந்த வெள்ளிக்கிழமை 52 108 தொழிற்சாலைகளும் வணிகத்தளங்களும் மூடப்பட்ட ஆணையிடப்பட்டன.


