Homeமலேசியாஅதிகரிக்கும் கோவிட்-19 நேர்வுகளும் மலேசிய சுகாதாரச் சேவையும் (பகுதி 2)

அதிகரிக்கும் கோவிட்-19 நேர்வுகளும் மலேசிய சுகாதாரச் சேவையும் (பகுதி 2)

கோலாலம்பூர் | 11/7/2021 :-

தொடர்ச்சி…

அம்பாங் மருத்துவமனை

மிகக் குறுகியக் காலத்தில் மூன்று முதல் நான்கு மடங்காக அதிகரித்துவரும் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை இங்குள்ள முன்களாஅப் பணியாளர்கள் மிகவும் சோர்ந்து காணப்படுகின்றனர்.

கட்டில்களின் எண்ணிக்கை அதிகப்படுத்துவது போன்ற எங்களால் முடிந்தவற்றைச் செய்து வருகிறோம். அவசர சிகிச்சைப் பிரிவின் நுழைவாயில் பகுதியில் தற்காலிகக் கட்டில்கள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இங்கு போதிய சுவாச உதவிக் கருவிகள் இல்லை. இதனாலேயே பல “உயிர்களைத் திரும்பக் கொண்டு வருவதில்” மருத்துவர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளன.

மிகவும் வருத்தத்திற்குரிய சூழலில் நாம் இருக்கிறோம். யார் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று தேர்வு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் எனச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சுவாச உதவிக் கருவிகளின் எண்ணிக்கை குறைப்பாட்டால் இவ்வாறு முடிவெடுக்க வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறோம்.

மரண எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மிகக் குறுகிய காலத்தில் மிக அதிகமானோர் பலியாகியுள்ளனர். என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இருக்கும் முன்களப் பணியாளர்களின் கண் முன்னே பல மரணிக்கிறபோது, சீக்கிரமே உணர்ச்சிகளற்ற ஜடமாகிப் போகிறார்கள்.

நோயாளிகளுக்கு உதவ நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாதச் சூழலில் உள்ளார்கள் முன்களப் பணியாளர்கள். நோயாளிகளின் நிலை மிக விரைவாக மோசமாகிப் போகிறது. எதுவும் செய்ய முடியாமல் தாதியர்களும் மருத்துவர்களும் தவிக்கிறார்கள்.

பகுதி 1க்கு இங்கே சொடுக்கவும்.

spot_img

latest articles

explore more