Homeமலேசியாஊழியர் சேமநிதி வாரியம் : 12ஆம் நாள் முதல் i-Citraவுக்கு விண்ணப்பிக்கலாம் !

ஊழியர் சேமநிதி வாரியம் : 12ஆம் நாள் முதல் i-Citraவுக்கு விண்ணப்பிக்கலாம் !

கோலலம்பூர் | 12/7/2021 :-

ஊழியர் சேமநிதி வாரியத்தின் i-Citra திட்டத்தின் கீழ் 55 வயதுக்க்குக் கீழ் உள்ளவர்கள் பண மீட்டெடுப்புக்கு இன்று முதல் (12/7/2021) விண்ணப்பிக்கலாம் என அது தெரிவித்தது.

அதற்கான விண்ணப்பத்தை icitra.kwsp.gov.my எனும் இணையத்தளத்தில் மேற்கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பம் திட்டமிடப்பட்டுள்ள நாளைக் காட்டிலும் மூன்று நாட்களுக்கு முன்னரே திறக்கப்பட்டுள்ளது.

i-Citra திட்டத்தின்கீழ் இணையத்தளத்தில் விண்ணப்பம் செய்ய ஊழியர் சேமநிதி வாரியத்தின் கணக்கில் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களில் OTP கடவுச்சொல்லைப் பெற்றுக் கொள்ள சரி பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பயன்பாட்டில் இருக்கும் வங்கிக் கணக்கையும் சரி பார்க்குமாறு நினைவுறுத்தப்பட்டுள்ளனர்.

i-Citra திட்டத்தின் கீழ் ஊழியர் சேமநிதி வாரியத்தின் சேமிப்புத் தொகைக்கு ஏற்ப ரி.ம. 5,000 வரை ஐந்து மாதங்களுக்கு பணத்தை மீட்டெடுக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் மாதப் பணம் அடுத்த மாதம் முதல் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் வங்கிக் கணாக்கில் சேர்க்கப்படும்.

பிரதமர் தான் ஶ்ரீ மகியாதீன், மக்கள் நலக்காப்பு & பொருளியல் மீட்பு தொகுப்புத் திட்டம் PEMULIHவின் கீழ் கடந்த 28/6/2021 அன்று அறிவித்தார். தற்போது மக்கள் எதிர்நோக்கியுள்ளப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க பிரதமர் இந்தத் திட்டத்தை அறிவித்தார்.

இது குறித்து மேலும் தகவல் தெரிந்து கொள்ள www.kwsp.gov.my இணையத்தளத்திலும் 03-8922 4848 எனும் தொலைப்பேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

spot_img

latest articles

explore more