கோலாலம்பூர் | 12/7/2021 :-

அரசியல் நாடகத்தை நிறுத்து வேண்டும் எனும் அறிவுறையை பிரதமர் மகியாதீன் முகம்மது யாசினிடமும் தேசியக் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளிடமும் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூற வேண்டும் என பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளர் சைஃபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

கடந்த சனவரி மாதம் தொடங்கி கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள்வதிலும் பொருளாதார மீட்சி குறித்த கொள்கைகளை முடிவெடுப்பதிலும் தேசியக் கூட்டணி அரசு முழு அதிகாரம் கொண்டுள்ளது.

அதன்படி முன்னெடுக்கப்பட்டப் பல நடவடிக்கைகள் கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள்வதற்குத் தொடர்பு இல்லாதவையாக இருந்தன என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் நாடகங்களை அரங்கேற்றுவதைத் தவிர்த்து கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரானப் போராட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனத் துணைப் பிரதமர் கூறியிருந்தார். ஆனால், அம்னோ பிரதமர் மகியாதீன் முகம்மது யாசினுக்கான ஆதரவை மீட்டுக் கொண்டது எந்த வகையில் கோவிட்-19ஐ எதிர்க்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்

டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை துணைப் பிரதமராக நியமித்ததற்கும் கோவிட்-19 பெருந்தொற்றை கையள்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த நியமணத்தில் மக்களுக்குத் துமியளவும் பயனில்லை. பதவியைத் தக்கவைக்கப் பிரதமரின் நடவடிக்கை என சித்தரித்துள்ளார்.

அரசியல் நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம் எனும் அறிவுறையை பிரதமருக்கும் அவரது நம்பிக்கைக் கூட்டணி நண்பர்களுக்கும் வழங்க வேண்டும் என துணைப் பிரதமருக்கு சைஃபுடின் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஓன்றரை ஆண்டுக்கும் மேலாக கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்க்க தேசியக் கூட்டணிக்கு அரசாங்கம் முழு அதிகாரம் இருந்தது. அந்தக் காலட்டத்தில் நாடாளுமன்றமும் முடக்கம் கண்டிருந்தது.

அவ்வாறானக் காலட்டத்தில் எந்த ஒரு கேள்வியும் வாதமும் இல்லாமல் சட்டங்களை இயற்றவும் செலவு செய்யவும் அதிகாரம் கொண்டிருந்தது.

அமைச்சரவையும் தேசியப் பாதுகாப்பு மன்றமும் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கும் நிலையில் இருந்தது. அதனை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இருப்பினும் கோவிட்-19 நேர்வுகளும் இறப்புகளும் அதிகரித்து வந்துள்ளன.

பொருளாதாரம் மந்த நிலையை எட்டியுள்ளது. நாட்டு மக்களில் பலர் வேலை இழந்துள்ளானர். வருமானம் பெருமளவுல் பாதிக்கப்பட்டுள்ளது. இல்லிருப்புக் கற்றல் முறையால் பிள்ளைகள் குழப்பமடைந்துள்ளனர். தற்கொலைகளும் அதிகரித்துள்ளன.

தற்போது நமது முழு கவனமும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதிலும் கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள சிறாந்த வீயூகத்தை அமைத்து காப்பாற்றுவதிலும் இருக்க வேண்டும் என சைஃபுடின் மேலும் சொன்னார்.