Homeமலேசியாசனவரி 15 முதல் ஈப்போ தாசேக் செர்மின் மக்கள் வருகைக்குத் திறக்கப்படும் !

சனவரி 15 முதல் ஈப்போ தாசேக் செர்மின் மக்கள் வருகைக்குத் திறக்கப்படும் !

ஈப்போ | 2/1/2022 :-

அண்மையில் இங்குள்ள கண்ணாடி ஏரி எனப்படும் தாசேக் செர்மினில் ஆடவர் ஒருவர் குதித்த சம்பவத்திற்குப் பிறகு அவ்விடம் வருகையாளருக்காக மூடப்பட்டது. விசாரணைக்குப் பிறகு எதிர்வரும் சனவரி 15 ஆம் நாள் முதல் மக்கள் வருகைக்குத் திறக்கப்படுவதாக ஈப்போ மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தகவல் அளித்த டத்தோ பண்டார் டத்தோ ருமைஸி பஹாரின், காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மக்கள் வருகைக்காகத் திறந்திருக்கும் எனக் குறிப்பிட்டார்.

இருந்த போதிலும், அவ்வாறானச் சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

மீண்டும் திறக்கப்பட்டுள்ள தாசேக் செர்மினால் உள்ளூர் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிக்கும் எனக் கூறினார்.

spot_img

latest articles

explore more