வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நடப்பு பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரியில் பெயர் கட்சியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்கூட்டணியின் இடம்பெறுள்ள உறுப்புக் கட்சியாக மஇகா முழுமையான ஆதரவை தெரிவிப்பதாக அதன் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ மு.சரவணன் அறிவித்துள்ளார்.
அதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை.
தேசிய முன்னணியின் ஒரு கூட்டுக் கட்சியான ம.இ.கா, பிரதமர் வேட்பாளராக இஸ்மாயில் சப்ரி வர வேண்டும் எனும் அம்னோவின் முடிவை வரவேற்கிறது. 15ஆவது பொதுத் தேர்தலில் இஸ்மாயில் சப்ரி அவர்களைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்த, அம்னோ முடிவெடுத்திருப்பது சரியான முடிவு என்பதில் ஐயமில்லை.
ம.இ.காவின் தேசியத் தலைவர் மதிப்பிற்குரிய தான் ஸ்ரீ SA.விக்னேஷ்வரன் அவர்கள் சார்பில், அம்னோவின் இந்த முடிவை நாங்கள் முழமையாக ஆதரிக்கிறோம்.
அன்புடன்,
டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்
மனிதவள அமைச்சர்
ம.இ.கா தேசியத் துணைத்தலைவர்


