Homeவிளையாட்டுசீ போட்டி : முக்குளிப்பு போட்டியில் மலேசியாவிற்கு 3ஆவது தங்கம்

சீ போட்டி : முக்குளிப்பு போட்டியில் மலேசியாவிற்கு 3ஆவது தங்கம்

ஹனோய், மே 9-

ஹனோய் சீ விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 1மீ springboard தனிநபர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று மலேசியாவின் மூன்றாவது தங்கப் பதக்கத்தை ஓய் ஷி லியாங் வென்றார்.

ஞாயிற்றுக்கிழமை (மே 8) நடைபெற்ற ஆண்களுக்கான 3 மீட்டர்springboard synchro போட்டியில் வெற்றி பெற்ற சிவ் இ வேயுடன் இணைந்து முதல் தங்கப்பதக்கத்தை வென்றிருந்த நிலையில் அந்த பினாங்கைச் சேர்ந்த முக்குளிப்பு வீரர் பெற்ற இரண்டாவது தங்கப்பதக்கம் இதுவாகும்.

இன்று நடந்த போட்டியில் 6 சுற்றுகளின் முடிவில் ஓய் ஷி லியாங் 377.70 புள்ளிகளை பதிவு செய்தார். இதனிடையே பெண்களுக்கான 3 மீட்டர் போட்டியில் மலேசியா 4ஆவது தங்கப்பதக்கத்தை வெல்லுமென பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு மை டின் முக்குளிப்பு அரங்கில் இல் நடைபெற்ற பெண்களுக்கான 1மீட்டர் ஸ்பிரிங்போர்டு தனிநபர் இறுதிப் போட்டியில் நூர் டாபிதா மலேசியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more