Homeகுற்றவியல்தாயை 15 துண்டுகளாக வெட்டிய மகன்! பேராவில் மேலும் ஒரு பயங்கரம்

தாயை 15 துண்டுகளாக வெட்டிய மகன்! பேராவில் மேலும் ஒரு பயங்கரம்

ஈப்போ, ஜூன் 5-

தாமான் கெரியானில் உள்ள ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து பொதுமக்கள் வழங்கிய புகாரின் அடைப்பிடையில் 15 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. அந்த பெண்மணி சொந்த மகனால் கொல்லப்பட்டிருக்கக்கூடுமென நம்பப்படுகின்றது.

அக்கம் பக்கத்தினரிடம் இருந்து வழக்கத்திற்கு மாறாகத் துர்நாற்றம் வீசுவதாக புகார் வந்ததை அடுத்து, 68 வயதான பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு போலீஸ் விரைந்ததாகப் பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ மியோர் ஃபரிடலாத்ராஷ் கூறினார்.

“வீட்டின் பின்புறத்தில் நடத்தப்பட்ட சோதனையில், மரப்பலகைகளால் மூடப்பட்ட கழிவுநீர் தொட்டியில் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.” என எக்ஸ் பார்க் சன்வே சிட்டியில் கிந்தா மாவட்ட மலேசியா விளையாட்டு லீக் நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் அதனை உறுதிப்படுத்தினார்.

வெளியில் சென்ற தம் தாயார் வீடு திரும்பவில்லை எனக் கொலை செய்யப்பட்ட பெண்மணியின் மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

முன்னதாக தாயார் வீடு திரும்பவில்லை என்பதைக் கொலை செய்திருக்கக்கூடுமெனச் சந்தேகிக்கப்படும் நபர் தம்மிடம் கூறியதாக அந்த மகள் போலீஸ் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

“சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் குற்றவியல் சட்டத்தின் 302 ஆம் பிரிவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்கு உதவுவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் டத்தோ மியோர் ஃபரிடலாத்ராஷ் உறுதிப்படுத்தினார்.

மறைந்த தந்தையின் சொத்தை பிரித்ததில் அதிருப்தி அடைந்த காரணத்திற்காகத் தாயின் உடலைக் கொன்று சிதைத்ததாக நம்பப்படும் சந்தேக நபரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட பெண் தனது கணவர் இறந்துவிட்ட நிலையில்  கடந்த 12 ஆண்டுகளாகச் சந்தேக நபருடன் வீட்டில் தனியாக வசித்து வந்ததுடன், பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் கொலைக்குப் பயன்படுத்தியதாக நம்பப்படும் அரிவாள், இரண்டு கத்திகளைக்  கைப்பற்றிய போலிசார், கொலைக்கான குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

spot_img

latest articles

explore more