Homeசமூகம்தரமான படைப்புகளை எண்ணங்களை வெளிப்படுத்துங்கள் - டத்தோஶ்ரீ சரவணன்

தரமான படைப்புகளை எண்ணங்களை வெளிப்படுத்துங்கள் – டத்தோஶ்ரீ சரவணன்

“நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றத்தை முன்வைத்து எழுதுங்கள். எழுத்தாளர்கள்,கவிஞர்கள் தங்கள் எழுத்தின் மூலம் மனதைக் கற்பிக்கவும், குணப்படுத்தவும், ஒளிரச் செய்யவும் வல்லவர்கள் என மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ மு. சரவணன் குறிப்பிட்டார்.

பா.ராமு அறக்கட்டளை ஏற்பாட்டில் கோலாலம்பூர் செந்தூல் செட்டியார் மண்டபத்தில் நடைபெற்ற மலேசியக் கவிஞர்களின் மரபுக் கவிதைத் தொகுப்பு நூல் “மலையகத் தொகை”வெளியீட்டு விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.

எழுத்தாளர்கள், 62 உள்ளூர் கவிஞர்களின், படைப்புகளைத் தாங்கிய மலையகத் தொகை நூலை வாசிக்கும் போது இளம் வாசகர்கள், புதிய திறனாளர்கள் தமிழ் இலக்கியத்தின் மீது கொண்டுள்ள அன்பைக் கண்டு தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நெத்தி நெறி விளக்கம்” (நீதி நெறி) என்ற பெயரில் நெறிமுறைகள் குறித்த பாடல் நூலை இயற்றிய கவிஞர் குமரகுருபரர் போன்ற பல சிறந்த உள்ளங்களைத் தமிழ் இலக்கிய உலகம் கண்டுள்ளது. அதோடு ஒரு தமிழ் கவிஞர், திரைப்பட பாடலாசிரியர், எழுத்தாளர், இந்தியாவின் தலைசிறந்த பாடலாசிரியர்களில் ஒருவராகக் கவிஞர் கண்ணதாசன் இருந்தார்” என்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே உள்ளூர் கவிஞர்களின் படைப்புகளை மறக்காமல் இருக்க ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பா.ராமு அறக்கட்டளை, சரவணனின் சிந்தனையில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. அறக்கட்டளையின் பணியின் ஒரு பகுதி ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு உள்ளூர் படைப்புகளை வெளியிடுவதாகும். இந்நிகழ்ச்சியை பா.ராமு அறக்கட்டளை, தமிழ் இலக்கியக் காப்பகம் இணைந்து நடத்தியது.

இத்தருணத்தில் மலேசிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள் தரமான படைப்புகளை உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டுமென சரவணன் வலியுறுத்தினார்.

ஒரு சமூகத்தின் வளர்ச்சி அறிவும், நேர்மறை எண்ணமும், கடின உழைப்பும், போட்டித்தன்மையும் கொண்ட மக்களைப் பொறுத்தே அமையும் என்பதை, சரியாகச் சிந்திக்கும் ஒவ்வொரு மலேசியத் தமிழரும் ஒப்புக்கொள்வார்கள் என்று அவர் வலியுறுத்தினார்.

தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புகள் கவிதை வாசிப்பு, பட்டிமன்றம் இலக்கிய உரை விருது விழா என பல்வேறான அம்சங்களைத் தாங்கி இந்த வெளியீட்டு விழா நடந்தது.

நூற்றுக்கணக்கான உள்ளூர் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், தரமான இலக்கியப் படைப்புகளை வெளியிடுவதற்கு உதவிய முன்னாள் பொதுப்பணி அமைச்சரும் மஇகா தலைவருமான துன் சாமிவேலுவின் பணி தொடரும் என்றும் சரவணன் உறுதியளித்தார்.

spot_img

latest articles

explore more