Homeசமூகம்சிறப்புத் தேர்ச்சி பெற்ற எஸ்பிஎம் மாணவர்களுக்கு தங்க மோதிரம் அன்பளிப்பு! -மலாக்கா முத்தமிழ் மன்றம் ஏற்பாடு

சிறப்புத் தேர்ச்சி பெற்ற எஸ்பிஎம் மாணவர்களுக்கு தங்க மோதிரம் அன்பளிப்பு! -மலாக்கா முத்தமிழ் மன்றம் ஏற்பாடு

மலாக்கா, ஜூலை 10-

எஸ்பிஎம் தேர்வில் 10 ‘ஏ’க்கள் மற்றும் அதற்கும் கூடுதலான ஏக்கள் பெற்ற தனது மன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளை மலாக்கா முத்தமிழ் மன்றம் தங்க மோதிரம் வழங்கி சிறப்பிக்கவுள்ளது.

கடந்தாண்டு எஸ்பிஎம் தேர்வில் 7 ‘ஏ’க்களுக்கு மேல் பெற்ற மன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு ரொக்கப் பணமும் நினைவுச் சின்னமும் வழங்கப்படும் வேளையில் அவர்களின் பெற்றோர்களும் சிறப்பிக்கப்படுவர் என்று இம்மன்றத்தின் தலைவர் ஆர்.எஸ்.ரகு தெரிவித்தார்.

தமிழ்ப்பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பண முடிப்பு வழங்கப்படும் என்றும் ரகு கூறினார்.
10 ‘ஏ’க்கள் மற்றும் அதற்கும் கூடுதலாக ‘ஏ’க்கள் பெற்ற மாணவர்களுக்கு மன்றத் தலைவர் தனது சொந்த செலவில் மோதிரம் அன்பளிப்பு செய்வார்.

2021 ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்பு உறுப்பினர்களாகப் பதிந்து கொண்டவர்களின் பிள்ளைகள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும்.

எஸ்பிஎம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றநாடு தழுவிய நிலையில் உள்ள மன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் இம்மாதம் 20 ஆம் தேதிக்குள் தங்களைப் பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தொடர்புக்கு 012-3655928, 019-6085813.

spot_img

latest articles

explore more