கோலாலம்பூர், அக். 29-
15 ஆவது பொதுத் தேர்தலில் தீபகற்பத்தில் பிகேஆர் சார்பில் போட்டியிடவிருக்கும் 72 வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்று அறிவித்தார். இப்பட்டியலில் சில பழைய முகங்கள் இடம் பெறாதது அவர்களின் ஆதரவாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பெட்டாலிங் ஜெயா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் அப்துல்லா, , சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா, அலோர்ஸ்டார் நாடாளுமன்ற உறுப்பினர் சான் மிங் காய், வாங்சா மாஜூ நாடாளுமன்ற உறுப்பினர் டான் யீ கியூ, கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் லீ பூன் சாய் ஆகியோரே அவர்கள்.
இவர்களையடுத்து, முன்னாள் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன், செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் நாட்ரா இஸ்மாயில் மற்றும் முன்னாள் சுங்கைப்பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஹாரி அப்துல் ஆகியோருக்கும் இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.


