கோலாலம்பூர், செப்.25-
மலேசிய இசைப் பிரியர்களுக்காக பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிவரும் டிசம்பர் 2ஆம் தேதி இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் மேற்பார்வையில் நடைபெறவிருக்கிறது.
“டும் டும் டும் “எனும் தலைப்பிலான இந்த கலை நிகழ்ச்சி தலைநகர், புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவிருக்கிறது .
இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார். அவரோடு பின்னணி பாடகர் மனோ, மதுபாலகிருஷ்ணன் மற்றும் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
இவர்களோடு தற்போதைய புகழ்பெற்ற பிரபல நடிகர், நடிகையும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் இதற்கான டிக்கெட் விவரங்கள் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் மேல் விபரங்களுக்கு ‘YESBOSS ‘சோசியல் மீடியாவை நாடலாம்.




