மலாக்கா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தன்முனைப்பு கருத்தரங்கு: 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

76

மலாக்கா, செப்.24-

மலாக்கா சமூக நல மற்றும் பொழுது போக்கு சங்கத்தின் ஏற்பாட்டில் இம்மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தன்முனைப்பு பேச்சு நடைபெற்றது.

இங்குள்ள ஹங்துவா மண்டபத்தில் இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்   நாட்டின் பிரசித்திப் பெற்ற தன்முனைப்பு பேச்சாளர் பேராசிரியர் டாக்டர் காதர் இப்ராஹிம், போலீஸ் உயரதிகாரிகள்,  மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என முக்கிய பிரமுகர்கள்  கலந்து கொண்டு  மாணவர்களுக்குத்  தேவையான  விஷயங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

மலேசியாவிற்கு நீதி என அழைக்கப்படும் இச்சங்கம் இதுவரை பல்வேறு சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முதன் முறையாக மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கினை  ஏற்பாடு செய்தனர்.

இக்கருத்தரங்கில் கவிமாறன்  சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்டு  ‘இலக்கை நோக்கி’ என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில்   பேசினார்.