spot_img
15.2 C
London
spot_img
Home மலேசியா இந்திய வர்த்தகர்களுக்கு உதவும் அணுகுமுறை ஆராயப்படும்! -அமைச்சர் சிவகுமார்

இந்திய வர்த்தகர்களுக்கு உதவும் அணுகுமுறை ஆராயப்படும்! -அமைச்சர் சிவகுமார்

0
257

கோலாலம்பூர், அக்.29-

நாட்டிலுள்ள இந்திய வர்த்தகர்களின் முன்னேற்றத்திற்கு உதவ  மற்ற அமைச்சுகளுடன் இணைந்து எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆராயப்படும் என்று மனித வள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.

வர்த்தகர்களுக்காக அரசாங்கம் என்னென்ன திட்டங்களை வகுத்துள்ளது.என்னென்ன திட்டங்கள் அமலில் உள்ளன என்பன போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருனான சந்திப்பு முக்கியம் என்று அமைச்சர் சொன்னார்.

இதுபோன்ற தகவல்களை  வர்த்தகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு மாநாடு மிகப் பெரிய பங்கை ஆற்றுகிறது என்று தலைநகரில் மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்க சம்மேளனத்தின் 72 ஆவது பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

வர்த்தகர்கள் தொடர்புடைய விவகாரங்களுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் கலந்துரையாடிய பின்னரே உரிய தீர்வைக் காணலாம் என்றார்.

இதனிடையே, அரசாங்கம் பல கடனுதவி திட்டங்களை வர்த்தகர்களுக்காக அறிமுகப்படுத்தினாலும் அதனைப் பெறுவதற்குரிய தகுதியை இவர்கள் கொண்டிருப்பதில்லை. கறுப்புப் பட்டியல், முறையான வங்கி கணக்கைக் கொண்டிருக்காதது போன்ற காரணங்களினால் பல உதவி திட்டங்களின் வாய்ப்பை இவர்கள் இழக்கின்றனர் என்று இச்செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்க சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில்  தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர்  செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, வர்த்தக பிரமுகர்கள் என பலர்  கலந்து கொண்டு  சிறப்பித்தனர் .