கோலாலம்பூர், டிச.12-
இங்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் விக்னேஸ்வரன் த / பெ ஸ்டீவன் வர்த்தக நிர்வாக துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.
மகளிர் நிர்வாக கல்லூரி – யுஇஎல் ஏற்பாட்டிலான இந்த பட்டமளிப்பு விழா தலைநகர் எஸ்டின் தங்கும் விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தான் முதுகலை பட்டம் பெறுவதற்குக் காரணமான அன்புத் தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு விக்னேஸ்வரன் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.




