spot_img
8.9 C
London
spot_img
Home மலேசியா பாத்தேக் ஏரின் தலைமைச் செயல்முறை அதிகாரியாக டத்தோ சந்திரன் மீண்டும் நியமனம்!

பாத்தேக் ஏரின் தலைமைச் செயல்முறை அதிகாரியாக டத்தோ சந்திரன் மீண்டும் நியமனம்!

0
425

கோலாலம்பூர், பிப்.14-

பாத்தேக் ஏர் விமான நிறுவனம் அதன் தலைமைச் செயல்முறை அதிகாரியாக டத்தோ சந்திரன் ராமமூர்த்தி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவரின் நியமனம் இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

இவர் கேப்டன் முஷாபிஸ் முஸ்தபா பக்ரியிடமிருந்து இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இப்போது பாத்தேக் ஏரின் முதல் தலைமைச் செயல்முறை அதிகாரியாக சந்திரன் ராமமூர்த்தி விளங்குகிறார். (இதற்கு முன் கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கி 2019ஆம் ஆண்டு வரை மலிண்டோ ஏர் என்ற பெயரில் இந்நிறுவனம் செயல்பட்டு வந்தது.) அதன் பின்னர் லயன் ஏர் குழும நிறுவனத்தின் வியூக இயக்குநராக இவர் பதவி உயர்வு பெற்றார். 

இவரது தலைமைத்துவத்தின் கீழ் பாத்தேக் ஏர் துரித முன்னேற்றத்தை மட்டுமின்றி வலுவான திட்ட வளர்ச்சி மற்றும் மிகச் சிறந்த சேவைக்கான அடைவுநிலையையும் பதிவு செய்து வருகிறது. இது பாத்தேக் ஏரின் நீண்ட கால வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி இருப்பதோடு தொழில்துறை பங்காளிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் முக்கிய தரப்பினருக்கு நிலையான மதிப்பையும் உருவாக்கியுள்ளது.