spot_img
14.9 C
London
spot_img
Home தேர்தல் பிரச்சனைகள் ஏதும் தீர்க்கப்படவில்லை என்றால் எங்களைக் கேளுங்கள்! -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

பிரச்சனைகள் ஏதும் தீர்க்கப்படவில்லை என்றால் எங்களைக் கேளுங்கள்! -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

0
349

கெர்லிங், மே 4-

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் வேட்பாளர் வெற்றி பெற்ற பின்னரும் கோல குபு பாருவில் பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்தால் அத்தொகுதி இந்தியர்கள் ம.இ.கா.வை நாடலாம் என்று இக்கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ம.இ.கா.வின் மீது அவர்கள் நம்பிக்கை வைக்கலாம். அப்படி பிரச்சனைகள் ஏதும் தீர்க்கப்படா விட்டால் அதற்குக் கட்சி பின்னர் பொறுப்பேற்கும்.

“ம.இ.கா.வின் தலைவர் என்ற முறையில் இங்கு வந்து பக்காத்தானுக்கு வாக்களிக்கும்படி நான் கேட்டுக் கொண்டேன்.  அப்படி பக்காத்தான் வென்ற பிறகும் இங்கு பிரச்சனைகள் தீர்வு காணப்படாமல் இருந்தால் எங்களையும் நீங்கள் கேள்வி கேட்கலாம்” என்றார்.

“உங்களின் பிரச்சனைகளை அரசாங்கத்திடம் நாங்கள் கொண்டு செல்வோம்” என்று இங்குள்ள இரட்டை முனீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

-மலேசியா கினி