spot_img
9.7 C
London
spot_img
Home மலேசியா 7,500 அந்நியத் தொழிலாளர்களுக்கான விதிமுறைகள் தளர்வு; மனித வள அமைச்சுக்கு நன்றி கூறினார் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்

7,500 அந்நியத் தொழிலாளர்களுக்கான விதிமுறைகள் தளர்வு; மனித வள அமைச்சுக்கு நன்றி கூறினார் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்

0
395

கோலாலம்பூர், ஜூன் 23-

இந்திய பாரம்பரிய தொழில்துறைகளுக்கு 7,500 அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பது மீதான விதிமுறைகளைத் தளர்த்தும் மனித வள அமைச்சின் முடிவுக்கு மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளன (மைக்கி) தலைவர் டத்தோஸ்ரீ என்.கோபாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

மனித வள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ கைருல் டிஸாமி டாவுட்டுடனான சிறப்புச் சந்திப்பு கூட்டம் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

மைக்கியின் தலைவர் என்ற முறையில் தான் அக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சபையில் தலைவர் நிவாஸ் ராகவன், துணைத் தலைவர் பிரபாகரன், செயலாளர் மோகனா உட்பட 3 இந்திய பாரம்பரிய தொழில்துறைச் சங்கங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 3 தொழில்துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட 7,500 அந்நியத் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டது. இத்தொழிலாளர்களைப் பெறுவதில் உள்ள பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று டத்தோஸ்ரீ கைருல் உறுதியளித்தார்.

குறிப்பாக ஜவுளித் துறைக்கு 5 தொழிலாளர்கள், நகைக் கடை, முடிதிருத்தும் தொழில்துறைகளுக்குத் தலா 2 தொழிலாளர்கள் எந்தவொரு நிபந்தனையுமின்றி வழங்கப்படுவர் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.