கோலாலம்பூர் ஜூலை 29
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட பிரபல நகைச்சுவை கலைஞர் சத்யாவை பிரதமரின் அரசியல் செயலாளர் ஃபார்ஹான் ஃபாவ்சி நேரில் சென்று கண்டு நலம் விசாரித்தார் .
“பீ மாய் பீ மாய் தாங் தூ” உட்பட பல நகைச்சுவை தொடர்கள் வாயிலாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தவர் சத்யா .
இவர் அண்மையில் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார் .
இவர் தொடர் சிகிச்சை மேற்கொள்வதோடு உடல் நிலையையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று பிரதமர் தமது முகநூலில் கேட்டுக் கொண்டார் .
சத்யாவின் மருத்துவ சிகிச்சைக்கு உதவியாக ஃபார்ஹான் தமது சார்பாக சத்யாவிடம் நிதியுதவி வழங்கியதாகவும் பிரதமர் கூறினார் .
இச்சந்திப்பில் கெஅடிலான் வங்சா மாஜூ டிவிஷன் தலைவர் ஹென்றி லாயும் உடன் இருந்தார்.


