Homeசமூகம்இபிஎஃப்பின் உயரிய லாப ஈவு:அரசு கொள்கை மீது முதலீட்டாளர்கள் கொண்ட நம்பிக்கையைக் காட்டுகிறது!  -பிரதமர்...

இபிஎஃப்பின் உயரிய லாப ஈவு:அரசு கொள்கை மீது முதலீட்டாளர்கள் கொண்ட நம்பிக்கையைக் காட்டுகிறது!  -பிரதமர் பெருமிதம் 

புத்ராஜெயா, மார்ச் 2-ஊழியர் சேமநிதி வாரியத்தின் (இபிஎஃப்)  அடைவு நிலை மடானி அரசாங்க கொள்கை மீது முதலீட்டாளர்கள் கொண்ட நம்பிக்கையையே காட்டுகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் மேம்பாடு மற்றும் முதலீடு ஆகியவற்றை உள்ளடக்கிய நிதி உருமாற்றம் மக்களுக்கு பெரும் நன்மைகளை அளித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

உலக பொருளாதார சந்தையின் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஊழியர் சேமநிதி வாரியம் இத்தகைய உயரிய லாப ஈவை வழங்கியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

ஊழியர் சேமநிதி வாரியம் வழக்கமான சேமிப்பு மற்றும் ஷரியா சேமிப்புக்கு 6.3விழுக்காடு லாப ஈவை நேற்று அறிவித்தது.

“இது இபிஎஃப்பின் வரலாற்றுபூர்வ அடைவு நிலையாகும்” என்று தமது சமூக ஊடக தளத்தில் அன்வார் விவரித்தார்.

 

spot_img

latest articles

explore more