Homeசமூகம்இந்துக்களின் உணர்வு பாதிக்கப்பட்ட விவகாரம்:மூவரின் மன்னிப்பு மட்டுமே போதாது!  டத்தோ லோகபாலா 

இந்துக்களின் உணர்வு பாதிக்கப்பட்ட விவகாரம்:மூவரின் மன்னிப்பு மட்டுமே போதாது!  டத்தோ லோகபாலா 

கோலாலம்பூர், மார்ச் 5-இந்துக்களின் மனதைப் பாதித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மூவரும் மன்னிப்பு கேட்டால் மட்டுமே போதாது. இவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கையை பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபால மோகன் அரசாங்கத்திடம் முன் வைத்தார்.

காவடி ஆட்டத்தை இழிவுபடுத்திய ஏரா எப்.எம் அறிவிப்பாளர்களின் காணொளி இந்நாட்டிலுள்ள இந்துக்களின் மனதைப் பாதித்துள்ளது.

இத்தகைய சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார் .

தங்களின் இச்செயலுக்காக மூவரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும் அவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று லோகபாலா வலியுறுத்தினார்.

மலேசியா பல்வேறு இனங்கள், மதங்களுக்கிடையே பரஸ்பர மரியாதை, நல்லிணக்க கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சமயமும் இத்தகைய உயரிய பண்புகளையே வலியுறுத்துகிறது.

இந்நிலையில் இந்துக்களின் சமயம் சார்ந்த நம்பிக்கையை இழிவுபடுத்துவது எரா எஃப்எம் அறிவிப்பாளர்களின் சிறுமைத்தனத்தையேக் காட்டுகிறது என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் சுட்டிக் காட்டினார் .

 

 

spot_img

latest articles

explore more