Homeசமூகம்சமூகம்79ஆம் ஆண்டில் ஆர்டிஎம்! 

79ஆம் ஆண்டில் ஆர்டிஎம்! 

கோலாலம்பூர், ஏப். 1-மலேசிய வானொலி தொலைக்காட்சி நிறுவனம் (ஆர்டிஎம்) இன்று தனது 79ஆவது ஆண்டில் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்துள்ளது.

ஆர்டிஎம் கடந்த 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி ஒலி/ஒளிபரப்பு துறையைத் தொடங்கியது. சிங்கையில் தோற்றுவிக்கப்பட்டு ஆர்டிஎம்1956 இல் கோலாலம்பூருக்கு மாறும் வரை பல பரிணாமங்களைக் கடந்துள்ளது.

கிட்டத்தட்ட 80 ஆண்டு ஒலி/ஒளிபரப்பு பயணத்தை எட்டும் நிலையில் செய்தி, விளையாட்டு, ஆவண படங்கள், உல்லாச நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் வழி தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது ஆர்டிஎம்.

நடப்பு இலக்கவியல் யுக சவால்களுடன் புத்தாக்க மற்றும் தேசிய இலக்கை நோக்கி இந்த அதிகாரப்பூர்வ அரசாங்க ஊடக நிறுவனம் முன்னோக்கிச் செல்கிறது.

 

 

 

spot_img

latest articles

explore more