Homeசமூகம்சட்டவிரோத குடியேறிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பீர்! டத்தோ லோக பாலா கோரிக்கை 

சட்டவிரோத குடியேறிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பீர்! டத்தோ லோக பாலா கோரிக்கை 

கோலாலம்பூர், நவ. 23-

நாட்டில் சட்டவிரோத சட்டவிரோத குடியேறிகளைத் தடுக்க அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிபிபி தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டார்.

சட்டவிரோத குடியேறிகளின் வரவால் நாட்டில் குற்றச் செயல்கள் குறிப்பாக போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் நிலைமை வருந்தத்தக்க வகையில் மோசமடைந்து வருவதாக இங்குள்ள பிபிபி தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் .

கடந்த 20 ஆண்டுகளாக நாட்டில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் பற்றி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் வெளியிட்ட தகவலையும் லோகபாலா மேற்கோள் காட்டினார்.

இத்தகைய அமலாக்க குறைபாடுகள் மற்றும் பொறுப்பற்ற போக்கு இனியும் தொடரக் கூடாது.

ஆகையால், இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மலேசியா துணிச்சலான மற்றும் கடுமையான நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டிய நேரம் கனிந்துவிட்டது என்றார் லோக பாலா.

இதன் பொருட்டு கடுமையான எல்லைப் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குத் துணை புரிவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகள் மீது அரசாங்கம் கவனம் செலுத்துவது அவசியம் என்றார்.

 

spot_img

latest articles

explore more