கோலாலம்பூர், நவ.8-
அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் டத்தோ கெவின் மொராய்சைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேருக்கானத் தீர்ப்பு இம்மாதம் 20ஆம் தேதி தெரிய வரும். கடந்த திங்கள்கிழமை தொடங்கி இன்று வரை 3 நாட்களுக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மற்றும் தற்காப்புவாதிகளிடமிருந்து விவாதத்தைச் செவிமெடுத்த பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸ்மான் அப்துல்லா இத்தேதியை நிர்ணயித்தார்.
இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆர்.தினேஸ்வரன் (வயது 25), ஏ.கே.தினேஷ்குமார் (வயது 24), எம்.விஸ்வநாத் (வயது 27), என்.நிமலன் (வயது 24) மற்றும் எஸ்.ரவி (வயது 46) ஆகியோர் கடந்த 2015 செப்டம்பர் 4ஆம் தேதி காலை 7.00 தொடங்கி இரவு 8.00 மணி வரையிலான இடைபட்ட நேரத்தில் செந்தூல், ஜாலான் டூத்தாமாஸ் ராயா மற்றும் சுபாங் ஜெயாவுக்கும் இடைபட்ட தூரத்தில் கொலை செய்ததாக 302ஆவதுக் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டதை மறுத்தனர்.
இதில் முதலாவது குற்றவாளியான கர்னல் டாக்டர் ஆர்.குணசேகரன் இதே தேதி, இடம் மற்றும் நேரத்தில் கெவின் மொராய்சை கொலை செய்ய இவர்கள் 6 பேருக்கும் உடந்தையாய் இருந்ததாக 109, 302ஆவது குற்றவியல் சட்டங்களின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.


