Homeவிளையாட்டுஅனைத்துலகப் போட்டிகளில் இருந்து விடைபெற்றார் புஃபோன்!

அனைத்துலகப் போட்டிகளில் இருந்து விடைபெற்றார் புஃபோன்!

மிலான், நவ.14 –

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறுவதில் இத்தாலி தோல்வி கண்டதை அடுத்து அனைத்துலக கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கோல் காவலர் கியான்லுயூகி புஃபோன் அறிவித்துள்ளார்.

39 வயதுடைய புஃபோன் இதுவரை 175 முறை இத்தாலி தேசிய கால்பந்து அணியில் களமிறங்கியுள்ளார் 1988 ஆம் ஆண்டில் 19 வயதில் முதல் முறையாக இத்தாலி தேசிய கால்பந்து அணியில் இடம்பெற்றார். ஆறு முறை உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பங்கேற்ற முதல் ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற நினைத்த புஃபோனின் கனவும் ஈடேறவில்லை.

60 ஆண்டுகளில் முதல் முறையாக இத்தாலி உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தேர்வுப் பெறுவதில் தோல்வி கண்டது. இத்தாலி அணியின் தோல்வி அந்நாட்டின் கால்பந்து விளையாட்டுத்துறையை வெகுவாக பாதித்துள்ளது என புஃபோன் கூறினார்.எனினும் இத்தாலி மீண்டும் அனைத்துலக அரங்கில் எழுச்சிப் பெறும் என புஃபோன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அனைத்துலகப் போட்டிகளில் இருந்து புஃபோன் விடைபெற்றதை அடுத்து ஏ.சி மிலானின் இளம் ஆட்டக்காரர் கிகியோ டோனாரூமா, இத்தாலி அணியின் முதன்மை கோல் காவலராக இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

latest articles

explore more