Homeவிளையாட்டுபிரான்ஸ் லீக் - ஆமியேன்சுடன் சமநிலைக் கண்டது மொனாக்கோ!

பிரான்ஸ் லீக் – ஆமியேன்சுடன் சமநிலைக் கண்டது மொனாக்கோ!

பாரிஸ், நவ.18-

பிரான்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான ஏ.எஸ். மொனாக்கோ 1 – 1 என்ற கோலில் ஆமியேன்சுடன் சமநிலைக் கண்டது. இந்த ஆட்டத்தில் ஸ்டேபன் ஜோவிடிக் அடித்த கோலினால் மொனாக்கோ தோல்வியில் இருந்து தப்பியது.

ஆட்டத்தின் 31 ஆவது நிமிடத்தில் செர்ஜே காக்பே போட்ட கோலின் ஆமியேன்ஸ் 1 – 0 என்ற கோலில் முன்னணி வகித்தது. இரண்டாம் பாதியில் மாற்று ஆட்டக்காரராக நுழைந்த ஸ்டெபன் ஜோவிடிக் 67 ஆவது நிமிடத்தில் போட்ட கோலின் மூலம் மொனாக்கோ ஆட்டத்தை சமப்படுத்தியது.

இந்த சமநிலை முடிவால் மொனாக்கோ, பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பாரிஸ் செயின் ஜெர்மனைக் காட்டிலு 6 புள்ளிகளில் பின் தங்கியுள்ளது.

spot_img

latest articles

explore more