ஏர் ஆசியா ஓப்பன் டோர் முகாம்; 20 லட்சம் வெகுமதிப் புள்ளிகளை வழங்குகிறது

0
1

கோலாலம்பூர், டிச.18
மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா, தனது பயணிகளுக்காக தொடர்ச்சியாக பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. தற்போது, ஏர் ஆசியா திறந்தக் கதவு முகாமின் (ஏர் ஆசியா ஓப்பன் டோர்) வாயிலாக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பிக் புள்ளிகளை பொது மக்கள் வெல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.

இந்நிறுவனம் தர்போது 6ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு இந்த சலுகையை வழங்குகின்றது. இதன் முதன்மையான நோக்கம் இந்த வட்டாரம் உட்பட பிற வட்டாரங்களில் பயணிகள் இன்னும் போகாத இடங்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலான பயண வாய்ப்புகள் பற்றி அவர்களுக்கு விளக்கத்தை அளிப்பதாகும் என ஏர் ஆசியா நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் ஸ்பென்சர் லீ தெரிவித்தார்.

மலேசியாவின் மறைமுகமான 16 கதவுகளைக் கண்டுபிடித்து அவற்றுடன் தங்களின் புகைப்படத்தையும் இணைத்து இன்ஸ்தாகிராமில் ஹேஷ்டேக்குடன் பதிவேற்றம் செய்து பொது மக்கள் அனுப்ப வேண்டும். இதன் மூலம் அவர்கள் 20 லட்சம் பிக் புள்ளிகளை வெல்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என ஓர் அறிக்கையில் ஸ்பென்சர் லீ குறிப்பிட்டார்.

இதில் பெறப்படும் பிக் புள்ளிகளை ஏர் ஆசியா பயணத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.  தொடக்கத்தில் வெறும் இரண்டு விமானங்களை மட்டுமே கொண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது 200க்கும் அதிகமான விமானங்களை கொண்டுள்ளதோடு 40 லட்சத்திற்கும் அதிகமானோரை விமானங்களின் வாயிலாக பறக்கவிட்டிருப்பதாக ஸ்பென்சர் லீ குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here