Homeமலேசியாமைபிபிபியின் வேட்பாளர்கள் பட்டியல் ஜனவரியில் பிரதமரிடம் சமர்ப்பிக்கும்

மைபிபிபியின் வேட்பாளர்கள் பட்டியல் ஜனவரியில் பிரதமரிடம் சமர்ப்பிக்கும்

கேமரன் மலை, டிச.18-
14ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் மைபிபிபி கட்சியின் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் ஜனவரி மாதம் தேசிய முன்னணியின் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடம் ஒப்படைக்கவிருப்பதாக அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.

இத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் மைபிபிபி கட்சிக்கான வேட்பாளர்களை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டதாக அவர் கூறினார். வேட்பாளர்களை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். கூடுதல் தொகுதிகளுக்கு நாங்கள் விண்ணப்பம் செய்திருக்கிறோம். இவற்றை எங்களுக்கு வழங்குவது தேசிய முன்னணியின் தலைவரைப் பொறுத்தது.

மைபிபிபி போட்டியிடவிருக்கும் தொகுதிகளில் நாங்கள் சேவையாற்றத் தொடங்கிவிட்டோம். அத்தொகுதிகளில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் வாக்காளர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம் என இங்குள்ள கார்னேஷன் பார்க்கில் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் சொன்னார்.

அத்தொகுதிகளில் மைபிபிபி வேட்பாளர்கள் போட்டி போட்டால் பிளவுபடாத ஆதரவை வழங்குவதாக அவர்கள் எங்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளனர் என கேவியஸ் கூறினார்.

spot_img

latest articles

explore more