Homeமலேசியாஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கினார் எஸ். குமார்!

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கினார் எஸ். குமார்!

கோலாலம்பூர், டிச.19  –

தேசிய ஹாக்கி அணியின் முதன்மை கோல் காவலர் எஸ். குமார், ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் வங்காள தேசத்தில் நடைபெற்ற ஆசிய ஹாக்கி கிண்ண போட்டியில் எஸ். குமார் பங்கேற்றார். அப்போது ஓமானுக்கு எதிரான குழுப் பிரிவு ஆட்டத்திற்கு பின்னர், நடத்தப்பட்ட , ஊக்க மருந்து பரிசோதனையில் எஸ். குமார் தோல்வி கண்டார்.

குமாரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரியில் சிபுட்ரமின் எனப்படும் ஊக்க மருந்து கலந்திருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் தடை செய்துள்ள மருந்துகளில் சிபுட்ரமினும் அடங்கும். உடல் எடையைக் குறைக்க இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் சீ விளையாட்டுப் போட்டியில் தேசிய டைவிங் வீராங்கனை வென்டி எங்கும் இதே வகையான ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டிப்பட்டிருந்தார்.

கடந்த 18 ஆண்டுகளில் 295 முறை தேசிய ஹாக்கி அணியை பிரதிநிதித்து குமார் களமிறங்கியுள்ளார். அனைத்துலக ஹாக்கிப் போட்டிகளில் ஊக்க மருந்து சோதனையில் எப்போதும் நேர்மறையான முடிவுகளை பெற்று வந்த குமார் முதல் முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். தற்காலிகமாக இரண்டு ஆண்டுகளுக்கு குமாருக்கு தடை விதிக்கப்படும் என மலேசிய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஶ்ரீ சுபஹன் கமால் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டில் காமென்வெல்த் , ஆசிய விளையாட்டுப் போட்டி, உலக ஹாக்கிப் போட்டிகளில் குமார் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் போடியம் திட்டத்தில் இருந்தும் குமார் நீக்கப்படுவார் என சுபஹன் கமால் தெரிவித்தார். இதன் தொடர்பில் உலக ஹாக்கி சம்மேளனத்தின் விசாரணையை எதிர்நோக்க தாம் தயாராக இருப்பதாக குமார் தெரிவித்துள்ளார். தம் வாழ்நாளில் தாம் யாரையும் ஏமாற்றியதில்லை என குமார் கூறினார். ஹாக்கி விளையாட்டியில் தமக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை விரைவில் நீக்கி மீண்டும் தேசிய அணிக்கு திரும்புவேன் என குமார் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more