சென்னை, டிச.20–
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா இறந்து ஓர் ஆண்டுகள் ஆன நிலையில் அவரது மரணம் தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் இன்னமும் இருந்து வருகின்றது.
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது ஒரு புகைப்படமும் காணொளியும் வெளியாகாதது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அவரது புகைப்படத்தையும் காணொளியையும் வெளியிடும்படி பல்வேறு தரப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
ஆயினும், அக்காணொளி தொடர்பான வேறு எந்த விவரங்களும் இல்லை.
https://www.youtube.com/watch?time_continue=23&v=gQeztWj3Kx0
