வியாழக்கிழமை, மார்ச் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > ஏப்.27இல் ரஜினியின் காலா! தனுஷ் அறிவிப்பு
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

ஏப்.27இல் ரஜினியின் காலா! தனுஷ் அறிவிப்பு

சென்னை, பிப்.10-

நடிகர் ரஜினி நடித்த காலா திரைப்படம் ஏப்., 27 ல் வெளியாகிறது. இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் காலா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினி ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் 2.0 என்ற படத்திலும் நடித்த வருகிறார். இந்நிலையில் 2.0 படத்தின் விஷுவல் எபக்ட்ஸ் வேலைகள் முடிவடைய காலதாமதமாகும் என்பதால் முதலில் காலா படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படம் வரும் ஏப்., மாதம் 27 ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016ல் துவங்கியது. நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. மும்பையை மையமாக கொண்டு காலா படத்தின் கதை அமைந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன