Homeவிளையாட்டுஹாரி கேனின் கோலால் அர்செனல் தோல்வி !

ஹாரி கேனின் கோலால் அர்செனல் தோல்வி !

லண்டன், பிப்.11 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற வட லண்டன் டார்பி ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 1 – 0 என்ற கோலில் தனது பரம வைரியான அர்செனலை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் அணியின் ஒரே கோலை ஹாரி கேன் இரண்டாம் பாதி ஆட்டத்தில் போட்டார்.

வட லண்டன் டார்பி ஆட்டத்தில் அர்செனல் அணிக்கு எதிராக ஏழாவது முறையாக ஹாரி கேன் கோல் போட்டுள்ளார். முதல் முறையாக வெம்பிளி அரங்கில் அர்செனலும் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் அணியும் களம் கண்டன, இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரண்டு அணிகளும் பாதுகாப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் டோட்டேன்ஹம் ஆட்டத்தை முழுமையாக ஆக்கிரமித்தது.

அவ்வபோது டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் அணி மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளை அர்செனல் கோல் காவலர் பீட்டர் செக் முறியடித்தார். எனினும் இரண்டாம் பாதியில் ஹாரி கேன் போட்ட கோல் அர்செனலை தோல்வியுறச் செய்தது.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் கிடைத்த அற்புதமான வாய்ப்பை அர்செனல் தாக்குதல் ஆட்டக்காரர் அலெக்சாண்டர் லக்கசாட் நழுவ விட்டார். இந்த தோல்வியால் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரைக் காட்டிலும் அர்செனல் 7 புள்ளிகளில் பின் தங்கியுள்ளது.

spot_img

latest articles

explore more