கோலாலம்பூர், ஏப்.24-
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவை பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டதற்காக அந்நாளிதழ் மீது கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அவருக்கு சாதகமாக அமைந்தது.
தமிழ் மலர் நாளிதழ் அவர் மீது அவதூறான செய்திகளை வெளியிட்டது நிரூபிக்கப்பட்டதால் அந்நாளிதழ் அவருக்கு இழப்பீடாக ரிம 570,000 வெள்ளியும் வழக்கிற்கான செலவு தொகையாக ரிம 220,000 வெள்ளியும் செலுத்த வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.
குறிப்பிட்ட காலத்திற்குள் அந்நாளிதழ் அந்த தொகையை செலுத்த தவறியதால் அதன் அலுவலத்திலும் அதன் நிர்வாகி டத்தோ எஸ்.எம்.பெரியசாமி வீட்டிலுள்ள தளவாட பொருட்களும் இதர அத்தியாவசிய பொருட்களும் இன்று சீல் வைக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டதாக கோலாலம்பூர் போஸ்ட் இணையத்தள செய்தி பதிவேடு செய்தி வெளியிட்டுள்ளது.

