கோலாலம்பூர், மே 13-
நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் துணைப்பிரதமராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளது பல்வேறு தரப்பினர்களின் ஆதரவை பெற்று வருகின்றது. இந்நிலையில், துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ வான் அசிஸாவிற்கு அம்னோவின் மகளிர் பிரிவு தலைவி டான்ஸ்ரீ ஷாரிசாட் அப்துல் ஜாலில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், அரசியல் கருத்து மாறுப்பட்டிருந்தாலும் ஒரு பெண் மற்றும் தாய் அடிப்படையில் வான் அசிஸா துணைப்பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் இந்த வரலாற்றுக்குரிய அடைவுநிலையைக் கண்டு தாம் பெருமையடைவதாகவும் அவர் கூறினார்.
இதில் தமது கடமையை வான் அஜிஸா சிறப்பாக ஆற்றி மலேசியர்கள் அனைவரையும் ஒன்றாக இணைப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். வான் அஜிஸாவுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு இறைவனின் ஆசீர்வாதத்தால் அவர் பல வெற்றிகளை பெற வேண்டும் என்று ஓர் அறிக்கையில் ஷாரிஸாட் கூறினார்.

