செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பி.என் 2.0 ஆகிவிடாதீர்கள்! ஹராப்பானுக்கு ராயிஸ் யாத்திம் எச்சரிக்கை
அரசியல்முதன்மைச் செய்திகள்

பி.என் 2.0 ஆகிவிடாதீர்கள்! ஹராப்பானுக்கு ராயிஸ் யாத்திம் எச்சரிக்கை

பெட்டாலிங் ஜெயா, மே 13- 
தேசிய முன்னணியிலிருந்து நம்பிக்கைக் கூட்டணிக்கு (பக்காத்தான் ஹராப்பான்) தாவும் தரப்பினரை ஏற்றுக்கொண்டால் அக்கூட்டணியும் பி.என். 2.0 ஆக மாறும் என முன்னாள் அமைச்சரான டான்ஸ்ரீ ராயிஸ் யாத்திம் எச்சரிக்கை விடுத்தார்.

ஹராப்பான் அவர்களை ஏற்றுக் கொள்வதைத் தவிர்க்க வேண்டுமென்றும், அது அனுமதிக்கப்பட்டால், அவர்கள் தங்களோடு பழைய பழக்க நடைமுறைகளைத் தங்களோடு கொண்டுவருவார்கள். ஹராப்பான் இதுவரை மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தும் வீணாகிப் போகும் என நேற்று தனது டுவீட்டர் பக்கத்தின் வாயிலாக அவர் கூறினார்.

ஹராப்பான் அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முற்பட வேண்டும். அமைச்சர்கள் நியமனத்தில் ரபிஸி ரம்லி ஹராப்பான் தலைமைத்துவத்தைக் குறை கூறியதை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ரபிஸி கட்சிக்காகப் பல தியாகங்களைச் செய்திருப்பதை நாம் மறக்கக்கூடாது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென ராயிஸ் யாத்திம் நினைவுறுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன