அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தே.மு. உறுப்பினர்களுக்கு ஹராப்பானில் எளிதில் இடம் வழங்கப்படாது! ராம் கர்ப்பால் சிங்
அரசியல்முதன்மைச் செய்திகள்

தே.மு. உறுப்பினர்களுக்கு ஹராப்பானில் எளிதில் இடம் வழங்கப்படாது! ராம் கர்ப்பால் சிங்

கோலாலம்பூர், மே 14-
தேசிய முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் நுழைவதற்கு எளிதில் அனுமதி வழங்கிவிட முடியாது என புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நாட்டில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றாலும் இவர்கள் அனைவரும் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தலைமைத்துவத்திற்கு ஆதரவளித்து வந்தவர்கள். திடிரென்று பக்காத்தான் ஹராப்பானிற்கு அவர்கள் வருவதற்கு அவ்வளவு எளிதில் வாய்ப்பு வழங்கிவிட முடியாது என அவர் கூறினார்.

தேசிய முன்னணி அரசாங்கத்தின் தலைமைத்துவத்தில் நாட்டை நிர்வகிப்பதில் தவறுகள் நடந்துள்ளால் இந்த மாற்றங்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில், தேசிய முன்னணியின் முன்னாள் தலைவர்கள் பக்காத்தான் ஹராப்பான் வாக்காளர்களை அணுகி வருகிறார்கள். நாட்டில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்காளர்கள் பக்காத்தான் ஹராப்பானை தேர்வு செய்துள்ளனர். ஆனால், தேசிய முன்னணியின் முன்னாள் தலைவர்கள் பக்காத்தான் ஹராப்பானில் நுழைந்தால் இந்த மாற்றத்தில் சமரசம் ஏற்பட்டுவிடும்.

வாக்காளர்களின் நம்பிக்கைக்கே முன்னுரிமையும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையின் மூலம் இதனை தெரிவித்தார். தகுதி வாய்ந்த தலைவர்களை பக்காத்தான் ஹராப்பான் கொண்டிருக்கிறது. தேசிய முன்னணியிலிருந்து பக்காத்தான் ஹராப்பானிற்கு வர நினைப்பவர்களின் ஆதரவு இல்லாமல் நாடாளுமன்றத்தில் 3இல் 2 பெரும்பான்மையை பூர்த்தி செய்ய முடியும் என்று அவர் சொன்னார்.

தொடர்ந்து, கடின உழைப்புடன் செயல்பட்டால் அடுத்து வரும் 15ஆவது பொதுத் தேர்தலிலும் 3இல் 2 பெரும்பான்மை வெற்றியை பெற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2012ஆம் ஆண்டு பினாங்கு ஜசெக அரசாங்கம் அறிமுகப்படுத்திய கட்சி தாவும் சட்டத்தை புதிய அரசாங்கம் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

60 ஆண்டு காலமாக தேசிய முன்னணி அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்து வந்தது. அக்கூட்டணி தலைவர்களின் ஆதரவு இல்லாமல் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் நாட்டை சீர்ப்படுத்த முடியும் என்று ராம் கர்பால் சிங் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன