அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தே.மு. அரசாங்கம் தந்த அழுத்தத்தால் அக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தேன்! ஏர் ஆசியா டோனி பெர்னாண்டஸ்
அரசியல்முதன்மைச் செய்திகள்

தே.மு. அரசாங்கம் தந்த அழுத்தத்தால் அக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தேன்! ஏர் ஆசியா டோனி பெர்னாண்டஸ்

பெட்டாலிங் ஜெயா, மே 13-
கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கும் அப்போதைய பிரதஹ்மர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கும் தாம் ஆதரவளித்ததற்கான காரணத்தை ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டோனி பெர்னாண்டஸ் இப்பொழுது தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் டோனி, அதில் தேசிய முன்னனி அரசாங்கமும் டத்தோஸ்ரீ நஜீப்பும் ஏர் ஆசியா எக்ஸ் தலைவர் பதவியிலிருந்து டான்ஸ்ரீ ரஃபிடா அசிஸை நீக்க வலியுறுத்தியது, பொதுத்தேர்தலுக்கு ஏர் ஆசியா அறிவித்த குறைந்த பயண சலுகைகளை ரத்து செய்ய சொன்னது என அக்கூட்டணி தமக்கு பல்வேறு அழுத்தங்களை அளித்ததாக அவர் கூறினார்.

அக்கூட்டணி வழங்கிய அழுத்தத்தின் காரணமாக தேசிய முன்னணியின் பிரச்சாரத்திற்காக வீடியோ காணொளி வெளியிட்டது, ஏர் ஆசியா விமானத்தில் தேசிய முன்னணி மற்றும் நஜீப்பின் படத்தை இடம்பெற செய்தது முதலானவற்றை தாம் மேற்கொள்ள நேரிட்டதாகவும் இதற்காக மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் சொன்னார்.

மலேசியர்களின் கருத்துகளை நான் பகிர்ந்துக்கொள்ள நினைக்கின்றேன். புதிய மலேசியா அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பினை வழங்கும் என நம்புகின்றேன். பெரிய அடைவுநிலையை அடையும் வகையில் அனைத்து தரப்பினர்களுக்கும் வாய்ப்பினை வழங்கக்கூடிய புதிய மலேசியாவை நாம் பெற்றிருப்பது என் வாழ்வில் மகிழ்ச்சியான தருணமாக இப்பொழுது உள்ளது.

அனைவரும் விமான பயணங்களை மேற்கொள்வதை தாம் உறுதி செய்வதில் அமலாக்க தரப்பினர், அதிகாரிகளிடம் தாம் போராடி வந்த நிலையில் இதற்கு முந்பு பல்வேறு அழுத்தங்களுக்கு தாம் ஆளாகியதாகவும் அக்காணொளியில் கூறியுள்ளார். அரசாங்கத்தின் அனுமதி அனைத்தையும் எதிர்பார்த்து சார்ந்திருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் நிறைந்த இத்துறையில் தாம் ஒரு விளையாட்டாளர் மட்டுமே கூறிய அவர், விமான போக்குவரத்து நிறுவனத்தை வழிநடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டிய நிலை இருப்பதையும் டோனி கூறினார்.

ரபிடா அரசாங்கத்தை எதிர்த்து வந்ததால் அவரை ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கும்படி தேசிய முன்னணி அரசாங்கமும் நஜீப்பும் நெருக்குதல் அளித்தனர். ஆனால், நான் மறுத்து விட்டேன். ரபிடாவின் தாக்கம் மற்றும் அவருக்கான ஆதரவு அதிகரித்த போது எனக்கு வழங்கப்பட்ட அழுத்தங்களும் அதிகரித்தன. பிரதமர்துறை அலுவலகத்திலிருந்து வந்த அழுத்தங்கள் மிக கடுமையாக இருந்து கொண்டு சென்றது. ஆனால், நான் ரபிடாவிடம் இது பற்றி கூறவில்லை. எனது முடிவில் உறுதியாக இருந்தேன்.

வாக்காளர்கள் தங்களது வீடுகள் இருக்கும் இடங்களுக்கு சென்று வாக்களிக்கும் வகையில் சலுகை விலையில் 120 விமான சேவைகளை அதாவது சுமார் 26,000 வாக்காளர்கள் கொண்டு செல்வதற்கான வாய்ப்பை நாங்கள் வழங்கிய போதும் எனக்கு அழுத்தம் அளிக்கப்பட்டது. குறிப்பாக, எனது நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யவிருப்பதாக மலேசிய வான்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது எங்களுக்கு பெரிய ஒரு வலியாகவும் வேதனையாகவும் இருந்தது. இதனால், இறுதி நேரத்தில் தாம் தேசிய முன்னணிக்கும் நஜீப்பிற்கும் ஆதரவளிக்க நேர்ந்ததாகவும் அதற்காக மலேசியர்களிடம் மன்னிப்பை கேட்டுக்கொள்வதாகவும் டோனி பெர்னாண்டஸ் கூறினார்.

Dear Malaysians, this is the awaited reply from me. This video explains why I made one of the toughest decisions ever for me. I’d also like to thank everyone who has continued to support me which meant so so much to me. AirAsia will continue to do its best to make millions of dreams come true. Love, Tony

Posted by Tony Fernandes on Sunday, May 13, 2018

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன