அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பி.கே.ஆரில் இணைந்தார் பத்து தொகுதி பிரபாகரன்! தியான் சுவா தகவல்
அரசியல்முதன்மைச் செய்திகள்

பி.கே.ஆரில் இணைந்தார் பத்து தொகுதி பிரபாகரன்! தியான் சுவா தகவல்

கோலாலம்பூர், மே 13-
அண்மையில் நடைபெற்ற 14ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆதரவில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டத்துறை மாணவர் பி.பிரபாகரன் பி.கே.ஆர். கட்சியில் இணைந்து விட்டதாக அக்கட்சியின் உதவித் தலைவரும் முன்னாள் பத்து நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தியான் சுவா தெரிவித்தார்.

இன்று அக்கட்சியில் இணைவதற்கான பாரத்தை பிரபாகரன் வழங்கி விட்டதாகவும் இன்று தொகுதி வாக்காளர்களிடம் இந்த அறிவிப்பை செய்து கொண்டாடவிருப்பதாகவும் எப்.எம்.டியிடம் அவர் கூறினார்.

22 வயது பிரபாகரன் நாடாளுமன்றத்திற்கு செல்லும் உறுப்பினர்களில் இளம் உறுப்பினராகும். அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 24,438 வாக்குகள் பெரும்பான்மையில் அவர் கெராக்கானின் டொமினிக் லாவைத் தோற்கடித்து நாடாளுமன்ற உறுப்பினராக தகுதி பெற்றார்.

நீதிமன்ற அபராதம் காரணமாக அண்மையில், நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான தியான் சுவாவின் வேட்புமனுவை மலேசிய தேர்தல் ஆணையம் நிராகரித்தது. அத்தொகுதியில் ஹராப்பான் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவான நிலையில் சாவி சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் பிரபாகரனுக்கு ஆதரவளிக்கு அக்கூட்டணி முடிவெடுத்தது.

பிரபாகரனுக்காக தியான் சுவா, துன் மகாதீர், வான் அசிஸா முதலானோர் பிரச்சாரம் செய்த நிலையில் அவர் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே அக்கூட்டணியில் இணைவது குறித்து முடிவெடுக்கப்படும் என பிரபாகரன் கூறிய நிலையில், இப்பொழுது வெற்றி பெற்ற பிறகு பி.கே.ஆரில் அவர் இணைந்து விட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன